ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோதர சதுர மற்றும் புளூமெண்டல் சங்க ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்ததும், இருவரும் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மோதர சதுரிடம் நீண்ட நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, புளூமெண்டல் சங்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து தொடர்ந்து வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று அபுதாபியில் தங்கியிருந்த நிலையில், வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளின் மூலம் இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சட்ட நடைமுறைகளின் கீழ் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து, தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








