Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே

மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே

2 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவை அவரது சட்டத்தரணி நேற்று முதன்முறையாக சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்போது, மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணைகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பான அரசின் நிலைப்பாடு மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கோரிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, தற்போது முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள தடுப்புக் காவல் நிலையத்தை “நரகம்” என வர்ணித்ததுடன், அங்கு மீண்டும் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் தன் மீது தனிப்பட்ட விரோத மனப்பான்மையுடன் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேவேளை, கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தன்னை தொழில்முறை ரீதியில் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையிலேயே தங்க விரும்புவதாக தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சுரேஷ் சலே பகிரங்கமாக விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாளுக்கான காணொளிக் காட்சிகள் எதுவும் இல்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலத்திற்கான காணொளிப் பதிவுகள் மட்டுமே பாதுகாக்கப்படுவதால், மார்ச் 8ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்துக்கான காட்சிகள் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொடர்புடைய காணொளித் தகவல்களை மீட்டெடுக்க முடியுமா என்பது குறித்து பிற தொழில்நுட்ப தரப்புகளின் உதவியைப் பெற மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

June 20, 2026
மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!
செய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!

June 20, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
Next Post
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு