ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜப்பான் உள்ளூர் நேரப்படி மதியம் 12.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சிபா மாகாணத்தின் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டோக்கியோவை அண்மித்த பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்பதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகளும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதுவரை உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சொத்து சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








