Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நான் பேசிய பிறகு விஜயின் இரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும்”; சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்திய கட்சித் தலைவர்!

“நான் பேசிய பிறகு விஜயின் இரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும்”; சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்திய கட்சித் தலைவர்!

2 years ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

“விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம்” என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் எ இராசேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தெரிவித்ததாவது..

” தமிழின மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் கண்டிப்பாக நான் முன் வந்து நிற்பேன். எனக்கு தற்போது வருகின்ற கோபமும் வேகமும், இராஜேந்திரன் அய்யாவுக்கு அப்போதே வந்தது என்பது பெருமைக்குரிய விஷயம்,

அவர் வாழ்ந்த சித்தாந்தத்தை, அவரின் குடும்ப உறுப்பினர்களும் அந்தக் கோட்பாடுடன் வாழ்த்து வருகிறார்கள் என்பது அரிதான விஷயமாக இருக்கிறது. மிகப்பெரிய ஆளுமையின் பேச்சு, எழுத்து, ஆகியவற்றை வருகின்ற சமூகம் பின்பற்ற வேண்டும்.

நேற்று ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். அந்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியவில்லை. உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் அவரது இணையதளம் முடங்கிவிட்டதாக கூறுகிறார்கள். 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிடுகிறார்கள்.

கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசி சென்று விட்ட பிறகு விஜய் இரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும். அவர்கள் எல்லாம் ரசிகர்கள் அதனால் அப்படி நடந்து கொள்ளக் கூடும். தாத்தன் பாட்டன் இல்லாமல் தனி ஒரு ஆளாக வந்து சாதனை படைத்தவர் ராஜேந்திரன். அவருக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மிகப்பெரும் பாக்கியம்” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
குற்றத்தடுப்பு பிரிவினரால் 653 பேர் கைது!

குற்றத்தடுப்பு பிரிவினரால் 653 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு