Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மின்சாரம் சார் பிரச்சனைகளுக்கு நடமாடும் சேவை; பிரதேச செயலகத்தில் இன்று கூட்டம்!

மட்டக்களப்பு மின்சாரம் சார் பிரச்சனைகளுக்கு நடமாடும் சேவை; பிரதேச செயலகத்தில் இன்று கூட்டம்!

2 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை மக்கள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக தேபா மண்டபத்தில் இன்று (19.05.2023) காலை 10.30 மணியளவில் விஷேட கூட்டமொன்று இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண மின்சார பாவனையாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவையொன்று ஒழுங்கு படுத்தப்படவுள்ளமை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

மின்சார பாவனையாளர் பிரச்சனைகளான, மின்சார கணக்கின் பெயர் மற்றும் முகவரி மாற்றல், மீற்றர், மின்கம்பங்கள் மற்றும் மின் மார்க்கம், மரக்கிளைகளை வெட்டுதல், புதிய மின் இணைப்பு, மின்னோட்டம், அறவீட்டு முறையை மாற்றுதல், மின் பட்டியல், மின்சார தடைகள் போன்றவற்றிற்கு தீர்வு மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்டுகிறது.

அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் 09.06.2023 திகதிக்கு முன்னர் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ அல்லது WhatsApp அல்லது குறுந்தகவல் (SMS) சேவை மூலமோ தெரியப்படுத்தலாம்.

மேலும் இந்நடமாடும் சேவை நடைபெறும் இடம், தினம், திகதி பின்னர் அறிவிக்கப்படும். அன்றைய தினம் பொது மக்களின் மின்சார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அது சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் கொண்டு
வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 7 பிரதேச செயலகங்களிலிருந்து பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தது.

மின்சார பிரச்சனைகளை சமர்ப்பிப்பதற்கு மற்றும் வருகையை உறுதிப்படுத்துவதற்கு 0777174466 / 0775687387 (ரஹான்)தொடர்பு கொள்ளவும்.

தொடர்புடையசெய்திகள்

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு
செய்திகள்

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

May 20, 2025
பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதிகளின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்; பாதுகாப்பு அமைச்சர்
செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதிகளின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்; பாதுகாப்பு அமைச்சர்

May 20, 2025
சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய மூவர் கைது
செய்திகள்

சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய மூவர் கைது

May 20, 2025
120 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்திகள்

120 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

May 20, 2025
தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கு யார் காரணம் எனபதை நான் வெளிப்படுத்துவேன்; சட்டத்தரணி வீரவிக்ரம
செய்திகள்

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கு யார் காரணம் எனபதை நான் வெளிப்படுத்துவேன்; சட்டத்தரணி வீரவிக்ரம

May 20, 2025
இலங்கை பாராளுமன்ற கூட்டத்தொடர் -நேரலை🔴 (தமிழில்/20.05.2025)
செய்திகள்

இலங்கை பாராளுமன்ற கூட்டத்தொடர் -நேரலை🔴 (தமிழில்/20.05.2025)

May 20, 2025
Next Post
அத்தியாவசிய தேவைக்காக அல்லலுறும் யாழ் மக்கள்!

அத்தியாவசிய தேவைக்காக அல்லலுறும் யாழ் மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு