Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்பூர் பொலிஸ் பிரிவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

சம்பூர் பொலிஸ் பிரிவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடித்து மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை நீதிபதி தஸ்னீம் பௌசான் வழங்கியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நான்கு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் (13) திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய குற்றச்சாட்டின் கீழ் சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரும் பொலிசாரை தாக்கிய குற்றச்சாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெளிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த கைது நடவடிக்கையின் போது பல்கலைக்கழக மாணவியின் தாயாரான கமலேஸ்வரன் விஜிதா என்பவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிஸாருக்கு கத்தி வெட்டி காயம் ஏற்பட்டதால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டிருந்தார்.

காயத்துக்கு உள்ளான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்பூர் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிய நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை வாங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

June 28, 2026
இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!
செய்திகள்

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

June 28, 2026
டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!
செய்திகள்

டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

June 28, 2026
“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை
உலக செய்திகள்

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை

June 28, 2026
ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்
செய்திகள்

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

June 28, 2026
கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு
செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

June 28, 2026
Next Post
ரணிலுக்கே ஆதரவு; திட்டவட்டமாக தெரிவித்தார் பிள்ளையான்!

ரணிலுக்கே ஆதரவு; திட்டவட்டமாக தெரிவித்தார் பிள்ளையான்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.