Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இறைச்சி கொத்தில் நாய் இறைச்சி!

யாழில் இறைச்சி கொத்தில் நாய் இறைச்சி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ். தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட போது குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. எனினும், குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் அன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இருப்பினும் குறித்த நபர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு, குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கியமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றையதினம் குறித்த உணவகத்தை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை, இறைச்சியினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது தெரியவந்தன.

அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் 8 மீனவர்கள் கைது; ஒருவரிடமிருந்து வெடிமருந்துகள் மீட்பு

June 23, 2026
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!
செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்; பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

June 23, 2026
Next Post
வாழைச்சேனை ஆழ்கடலில் மூழ்கிய இயந்திர படகு; ஒருவர் பலி!

வாழைச்சேனை ஆழ்கடலில் மூழ்கிய இயந்திர படகு; ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு