Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு காணி பத்திரம்!

குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு காணி பத்திரம்!

2 years ago
in செய்திகள்

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரமே அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை வழங்கும்போது ஏற்படும் பிற வரிகளில் இருந்து விலக்கு அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதோடு அதற்கான நோட்டரி கட்டணம், முத்திரைகள் மற்றும் பிற வரிகள் திறைசேரியால் ஏற்கப்பட வேண்டும்.

2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக நகர வீட்டு உரிமையின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 50,000 வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த ஜனவரி 04ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், சட்டமா அதிபர் தனது அவதானிப்புகளை முன்வைத்து உறுதிப் பத்திரங்கள் வழங்கும் போது அந்த வீடுகளில் வசிக்கும் ஒரு தரப்பினருக்கு பாதகம் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடுகளில் வசிப்பவர்களில் சிலர் ஏற்கனவே டிசம்பர் 31 முதல் நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளனர்.

எனினும், சிலர் செலுத்தாத காரணத்தினால் உரிய நேரத்தில் உரிய வாடகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கு இந்த பாதகம் ஏற்படக்கூடும் என சட்டமா அதிபர் தனது அவதானிப்புகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சட்டமா அதிபரின் அவதானிப்புகளை கவனத்தில் கொண்டு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, டிசம்பர் 31இற்குள் வாடகை செலுத்திய வீட்டு உரிமையாளர்களுக்கு பத்திரங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க முன்மொழிந்தார்.

மேலும், உரிய காலத்துக்கான வாடகையை செலுத்தி பிறருக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கவும் முன்மொழியப்பட்டது.

இந்நிலையயில், குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் முழு உரிமையும் மாற்றப்பட்ட பின், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகள் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ கூட்டுத்தாபனங்களுக்கு மாற்றப்படும்.

இதற்காக நம்பிக்கை நிதியமொன்றை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி 12,230 வீடுகளுக்கு தலா 50,000 ரூபா வீதம் 611.5 மில்லியன் ரூபாவை திறைசேரியிலிருந்து வழங்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையிடம் கோரியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள்; ஜனாதிபதியிடம் இலங்கை இந்து சம்மேளனம் கோரிக்கை!

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள்; ஜனாதிபதியிடம் இலங்கை இந்து சம்மேளனம் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.