Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டம்!

சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டம்!

2 years ago
in செய்திகள்

நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன. குறித்த அனர்த்தம் நேற்று இரவு (22) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

நாட்டில் அதிகமான இடங்களில் கடும் காற்றும் மழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் நுவரெலியாவில் நேற்று வீசிய கடும் காற்றினால் அதிகமான வீடுகளில் கூரையில் பொருத்தப்பட்டிருந்த தகரங்கள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் இன்றும் (23) தொடர்ச்சியாக கடும் காற்றும் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதியில் பல பிரதான வீதியோரங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பதாதைகளும் பெயர்ப்பலகைகளும் உடைந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளன.

நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று அதிகாலையில் நுவரெலியா மத்திய பொது சந்தைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த பகுதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

எனவே ஹட்டன் நுவரெலியா ,வெலிமட, கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு வாகன விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!
செய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!

June 15, 2026
தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!
செய்திகள்

தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

June 15, 2026
அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

June 15, 2026
புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!
செய்திகள்

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

June 15, 2026
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
Next Post
நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு