Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானியாவில் மாஸ்டர்செஃப் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழன்!

பிரித்தானியாவில் மாஸ்டர்செஃப் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழன்!

2 years ago
in செய்திகள்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பிரின் பிரதாபன், பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியின் 20ஆவது தொடர் முடிவில் வெற்றிபெற்று, “மாஸ்டர்செஃப் சம்பியன் 2024“ என்ற மதிப்புமிக்க பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், குறித்த போட்டியின் நடுவர்களான ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோரால் மாஸ்டர்செஃப் கிண்ணம் பிரினுக்கு வழங்கப்பட்டது.

இதன்படி, மாஸ்டர்செஃப் வரலாற்றின் ஒரு அங்கமாக 29 வயதான பிரின், இரண்டு தசாப்தகால சிறந்த சம்பியன்களுடன் இணைந்துள்ளார்.

எட்டு வாரங்கள் கடினமான சவால்களுக்குப் பின் 57 சமையல் போட்டியாளர்களை கடந்து, பிரின் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக பிரின் குறிப்பிட்டுள்ளார்.

அற்புதமான, காரமான சமையல் பின்னணியை தமது பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது சமையல் பகுதிகள் உண்மையிலேயே இலங்கையின் தமிழ் பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்று பிரின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த போட்டியின் நடுவரான ஜோன் ”பிரின் ஒரு அசாதாரண சமையல்காரர் மற்றும் ஒரு அற்புதமான திறமையுடையவர்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மற்றுமொரு நடுவர் ”பிரினுருக்கு நுட்பம் உள்ளது, படைப்பாற்றல் உள்ளது. என் அனுபவத்தில், பிரின் தனித்துவமானவர். நான் இதுவரை கண்டிராத புத்திசாலித்தனமான திறமைகளில் ஒன்று இவரிடம் உள்ளது“ என பாராட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்
உலக செய்திகள்

லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

June 21, 2026
டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
Next Post
தொலைபேசி கம்பிகளை அறுத்து எடைக்குப் போட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் கைது!

தொலைபேசி கம்பிகளை அறுத்து எடைக்குப் போட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு