Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது!

2 years ago
in செய்திகள்

வெசாக் பௌர்ணமி தினமான நேற்று (23) காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் டுபாய் மற்றும் இந்தியாவிலிருந்து திரும்பிய ஆண் மற்றும் பெண் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 5.1 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், இந்தியாவில் இருந்து திரும்பி வந்த சந்தேகத்திற்கிடமான பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL174 இல் பெங்களூரில்(Bangalore )இருந்து அதிகாலை 5.00 மணியளவில் நாட்டை வந்தடைந்த குறித்த பெண் பயணி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடைசெய்யப்பட்ட 86 அட்டைப்பெட்டிகளில் 17,200 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு சிகரெட்டின் மதிப்பு ரூ.100 என்பதுடன் இதன் மொத்த மதிப்பு ரூ. 1,720,000.ஆகும்

48 வயதான இந்த பெண் பயணி சிலாபத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவில் இருந்து இங்கு விற்பனை செய்வதற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வழக்கமான பயணி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 226 இல் டுபாயில் இருந்து திரும்பிய தொழிலதிபர் என்று தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவரிடமிருந்து ரூ3,440,000 பெறுமதியான சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை 5.15 மணியளவில் தரையிறங்கிய மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்ட குறித்த பயணியை, சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, ​​அவரிடமிருந்த இரண்டு வகையான இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள், 24, 600 சிகரெட்டுகள் அடங்கிய 123 அட்டைப்பெட்டிகள் மற்றும் 9,800 சிகரெட்டுகள் அடங்கிய மற்றொரு பிராண்டின் 49 அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.3,400,000. இரண்டு பயணிகளும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர் மற்றும் மே 29 அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.

கைப்பற்றப்பட்ட மொத்த சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 5,100,000 ஆகும்.அதே நாளில் அவை நீதிமன்றங்களில் முற்படுத்தப்படும்.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது
காணொளிகள்

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது

June 28, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

June 28, 2026
இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!
செய்திகள்

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

June 28, 2026
டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!
செய்திகள்

டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

June 28, 2026
“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை
உலக செய்திகள்

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை

June 28, 2026
ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்
செய்திகள்

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

June 28, 2026
Next Post
காதலி பிரிந்த சோகத்தில் தன்னைதானே சுட்டு உயிர்மாய்த்த இளைஞன்!

காதலி பிரிந்த சோகத்தில் தன்னைதானே சுட்டு உயிர்மாய்த்த இளைஞன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு