Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசுக் கட்சியை சந்தித்த அனுரகுமார; யாழ் அரசியல் சமூகத்தில் பரபரப்பு!

தமிழரசுக் கட்சியை சந்தித்த அனுரகுமார; யாழ் அரசியல் சமூகத்தில் பரபரப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள்

யாழிற்கு விஐயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு மற்றும் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(11) காலை இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது பிரதானமாக அதிபர் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம், ஊடகப் பேச்சாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை திடீரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் தினம் தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் நேற்றையதினம் தேசிய மக்கள் சக்தியினரும் தமிழரசுக் கட்சியினரை சந்தித்துள்ளமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
இஸ்ரேலில் வேலை வாய்ப்பு; பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு; பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு