Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு; அரச அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு; அரச அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு விஸ்வமடு நெத்தலி ஆறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்களின் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு,பகலாக காணி உரிமையாளரின் அனுமதி இன்றி தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்களின் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு காவல்துறை மற்றும் கனியவளப் பிரிவினர் மற்றும் பொது அமைப்புகளுக்கு தெரியப்படுத்தியும் எவருமே இவ்விடயம் தொடர்பாக கண்டுகொள்வதில்லை எனவும் இதன் காரணமாக அப்பாவி விவசாயிகள் பல வழிகளிலும் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், நெற்செய்கை மேற்கொள்ளும் பொழுது காட்டு யானையின் தொல்லை ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதாகவும், வயல் அறுவடை முடிந்ததும் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் இதனால், பாரிய அளவில் வயல் நிலங்கள் சீர் செய்வதற்கான பணச் செலவு ஏற்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையங்களிலோ அல்லது வேறு எவரிடமும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் மணல் கொள்ளையர்களினால் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனிமையில் தமது வயல் பகுதிகளுக்கு பார்வையிடுவதற்கு செல்ல முடியாத அச்ச நிலை தோன்றியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய தீர்வுகளை பெற்று விவசாய நிலங்களில் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
லப்டொப்பை சார்ஜ் போட்டுக்கொண்டு வேலை செய்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

லப்டொப்பை சார்ஜ் போட்டுக்கொண்டு வேலை செய்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு