Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இடம் கிடையாது; சரத் வீரசேகர

சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இடம் கிடையாது; சரத் வீரசேகர

2 years ago
in அரசியல், செய்திகள்

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு 29 ஆயிரம் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எனவே, இந்த நாட்டில் சமஷ்டி கட்டமைப்பைக் ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

2015 நல்லாட்சி காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்புப் பணி இறுதிப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி அநுர வழங்கியுள்ளார். இலங்கை மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் எனவும், மாகாண சபைகளுக்குரிய அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மத்திய அரசு இரத்துச் செய்ய முடியாது.

மாகாண இணைப்புக்குரிய அதிகாரமும் மாகாண சபைக்குச் செல்லும். எல்லை நிர்ணயம்கூட மாகாண சபை வசம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன. எனவே, 2015 அரசமைப்பு அமுலுக்கு வந்தால் இலங்கை சமஷ்டி நாடாக மாறும். நாடாளுமன்ற அதிகாரம் குறையும். எனவே, இதற்கு இடமளிக்கக் கூடாது.

ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்குப் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். எனவே, சமஷ்டி முறைமைக்கு இடமளிக்கமாட்டோம். தமிழ் டயஸ்போராக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் தயாரில்லை.

ஆட்சியாளர்கள் கள்வர்கள் எனக் கூறியே அநுர தரப்பு ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்னும் கள்வர்கள் பிடிபடவில்லை. இதன்மூலம் அவர்கள் கூறியவை பொய்கள் என்பது உண்மையாகியுள்ளன-என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
வடக்கில் தமிழரசுக் கட்சியின் வாக்குவங்கி வீழ்ச்சியடைகிறது; உதய கம்மன்பில

வடக்கில் தமிழரசுக் கட்சியின் வாக்குவங்கி வீழ்ச்சியடைகிறது; உதய கம்மன்பில

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு