குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டண அதிகரிப்பு காரணமாக நீர் வழங்கல் துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமையினால் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.