இம்முறை குடிசன மதிப்பீடு செய்ய வரும் அலுவலர்கள்/ ஆய்வாளர்கள் எம்மக்களின் கருத்துக்கு செவி மடுக்காமல் அவர்கள் கருதும் விடயங்களை பதிவு செய்வதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
விசேடமாக இன அடையாளம் தொடர்பில் இம்முறை புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள(இந்தியத் தமிழர் / மலையாகத் தமிழர்) என்ற அடையாளத்தை பதிவதை தவிர்த்து வருவதாக முறைப்பாடுகள் கிடைக்க பெற்ற வண்ணம் உள்ளதாக மலையக மக்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டளர் வீரசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த மலையக மக்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் வீரசிங்கம்,
இம்முறை குடிசன மதிப்பீடு செய்ய வரும் அலுவலர்கள்/ ஆய்வாளர்கள் எம்மக்களின் கருத்துக்கு செவி மடுக்காமல் அவர்கள் கருதும் விடயங்களை பதிவு செய்வதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
விசேடமாக இன அடையாளம் தொடர்பில் இம்முறை புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள(இந்தியத் தமிழர் / மலையாகத் தமிழர்) என்ற அடையாளத்தை பதிவதை தவிர்த்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக குடிசன மற்றும் புள்ளி விபர திணைக்கள பணிப்பாளரின் கவனத்திடற்கு கொண்டுவரக் கூடியதாக இருந்தது.
நாங்கள் எவ்வளவு பயிற்சிகள் வழங்கினாலும் இவ்வாறான சில தவறுகள் இடம்பெறலாம், அது தொடர்பில் உடனடியாக கவனத்திற்கு எடுத்து குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவுற்குற்பட்ட ஆய்வுக்கு பொறுப்பானவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி அத்தவறு தொடராவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தவறுகள் இன்னும் பல இடங்களில் இடம்பெறலாம்.
எனவே இக்காலப் பகுதியில் உங்கள் இல்லத்திற்கு அல்லது நீங்கள் வாடகைக்கு இருக்கும் இல்லத்திற்கு வரும் அலுவலர் இவ்வாறான விதத்தில் தகவல்களை உங்கள் கருத்தினை செவிமடுக்காமல் அவர் தன் இஷ்டத்திடற்கு ஏற்றால் போல் புள்ளிவிவர படிவத்தில் பதிந்தால் உடனடியாக உங்கள் இல்லத்தின் வாயில் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் சிவப்பு நிற ஸ்டிக்கரில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஐந்து இலக்க குறியீட்டை குறிப்பிட்டு அல்லது அந்த ஸ்டிக்கரை புகைப்படம் எடுத்து உங்கள் பிரதேச செயலர் பிரிவு, கிராம அலுவலர் பிரிவை குறிப்பிட்டு 0719929029 / 0777034136/ 0779915459/ +94 71 649 5068 வாட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்கிறார்.