கிழக்கு ஆசிய நாடான மொங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மொங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 114 புதிய பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பாதிப்புகளிலிருந்து 95 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இந்தத் தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,904 ஆக உயர்ந்துள்ளது.

மொங்கோலியாவின் மருத்துவர்கள் கூறுகையில், புதியதாக கண்டறியப்பட்டுள்ள பாதிப்புகளில், 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் வெறும் ஒரு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.