இலங்கை மெதடிஸ்த திருட்சபை வாழைச்சேனை சேகரம் கிரான் ஜொபியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமைகள் தொடர்பான பல்வேறுபட்ட நிகழ்வுகள் கிரான் உவெஸ்லி மண்டபத்தில் நேற்று மாலை (19) இடம்பெற்றது.
இதன்போது பிரதான நிழ்வாக கிரான் ஜொபியல் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் தயாரிக்கப்பட்ட ‘வாழவிடுங்கள்’ என்ற தலைப்பில் பாடல் வெளியிடும், ‘சாமி’ என்ற தலைப்பிலான சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு குறுந்திரைப்படமும் வைபவ ரீதியாக அதிதிகளால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அடக்குமுறைக்குள்ளே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகின்ற சிறுவர்களின் குரலாக இக் குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து துஷ்பிரயோகத்தைப் புகாரளிக்கவும் 1929 ஜ அழைக்கவும் என்ற பெயர்ப்பலகை கிரான் மட்டக்களப்பு பிரதான வீதியில் பொதுமக்களின் பார்வைக்காக திரை நிக்கம் செய்யப்பட்டது. அத்துடன் சிறுவர்கள் கைகளைக் கழுவுவதற்குரிய சரியான முறைகளை அறிந்து கொள்வதற்கான பயிற்சி நிகழ்வுகளும் ஏறபாடு செய்யப்பட்டிருந்தன.
மேற்படி நிகழ்வில் அதிதிகளாக அருட்பணி வி.உதயகுமார், ரி.டி.நிதர்சன், ஏ.வி.அமல்ராஜ், அருட்சகோதரிகளான ஜேதேவினி, அமலாநிதர்சினி ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.