கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் நிர்வாகத்துக்குள் 10 வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல்களுக்கு முறையான விதத்தில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (19) மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது இது குறித்து தெரிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னம்பிட்டியில் ஏற்பட்ட விபத்துக்கு காரணமாக இருந்த பேருந்துக்கு கூட முறையான அனுமதிப்பத்திரம் இல்லை 4 அனுமதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு 10 பேருந்துகளை செலுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் நம்பிக்கையுடனும்,பாதுகாப்புடனும் பயணிக்க கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையில் காணப்படும் ஊழல்வாதிகளுக்கு எதிராக கிழக்கு மாகாண ஆளுநர் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
அதேமயம் மட்டக்களப்பு விவசாயிகள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் ஒரு கிலோ நெல்லை கூட மத்திய அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யவில்லை என குற்றம் சுமத்தியிருந்தார்.