இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்றையதினம் (21) 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கும் அநுர தரப்பு 2/3 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ள இந்நிலையில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஆசன பற்றாக்குறை ஒன்று நிலவுகிறது. இதன் காரணமாக தெரிவுசெய்யப்பட்ட 159 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க ஆளும் தரப்பு வரிசையில் அமர்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரச தரப்பு ஆசனங்களில் அமர இருப்பதாகவும், அதே சமயம் மீதமுள்ள 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தே தமது பாராளுமன்ற அமர்வுகளில் ஈடுபடஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் அதே வரிசையில் தான் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமர வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. எனவே முன்வரிசையில் யார் அமர்வார்கள், பின் வரிசையில் யார் அமர்வார்கள் என்பது தீர்மானிக்கப்படவில்லை. சில சமயம் இது அரசாங்கத்தின் உட்கட்டமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்துமோ என்பது புரியாமல் உள்ள நிலையில் ஒரு சிறு காலத்திற்காவது அரசதரப்பு உறுப்பினர்கள் எதிர் கட்சி வரிசையில் அமர வேண்டிய தேவைதான் தற்போது உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன.