Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டுபாயிலிருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபா மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கடல் வழியாக போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குழுவுக்கு இந்த பணம் வழங்கப்படவிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில, தொடுவாவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நேற்று (23) இரவு மஹவெவ, சிவிராஜ மாவத்தையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை சோதனை செய்தனர்.

அப்போது, முச்சக்கர வண்டியில் இருந்த கறுப்பு நிற பயணப் பையை பரிசோதித்தபோது, அதில் பெருந்தொகையான பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், முச்சக்கர வண்டியில் இருந்த இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணை செய்தபோது, கடந்த 19ஆம் திகதி பேருவலை அருகே கடலில், சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருள் தொகை பலநாள் மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது.

அந்த படகில் இருந்த கேப்டன் உட்பட 6 பேருக்கு தலா 30 இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு போதைப்பொருளை கொண்டு வருவதற்கு முன்னர், கடத்தல்காரர்கள் பலநாள் மீன்பிடி படகிற்கு 70 இலட்சம் ரூபா வழங்கியிருந்தனர்.

முச்சக்கர வண்டியில் பணத்தை கொண்டு வந்த நபரும் பலநாள் மீன்பிடி படகு ஒன்றின் உரிமையாளராவார். முன்னதாக, 100 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் அந்த படகு கைப்பற்றப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் மேற்பார்வையின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஏ.பி. பிரியந்தவின் வழிகாட்டலின் பேரில், பலநாள் மீன்பிடி படகின் கேப்டன் மற்றும் இரு பெண்கள் உட்பட மேலும் 6 சந்தேக நபர்களை, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டிக்கு பாதுகாப்பு வழங்கிய மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளனர்.

டுபாயில் இருந்து இயக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள், சிலாபம், தொடுவாவை, நீர்க்கொழும்பு, மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இதுவரை தெரியவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
Next Post
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.