கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா. ஜ. க. சார்பில் வரும் 23ஆம் திகதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அந்தக் கட்சியின் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அரசு கொடுத்த நம்பிக்கை அடிப்படையில் 100 சதவீதம் பயிரிட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் டெல்டா பகுதிகளுக்கு மட்டும் 9 ஆயிரம்கனஅடி நீர் கல்லணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
அவ்வாறு இருந்தால்தான் மழையில்லாதபோதும் விவசாயிகளால் பயிர்களை காப்பாற்ற
முடியும். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே வெளி யேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கான நீர்வரத்து 200 கனஅடி அளவிலே வந்து கொண்டிருக்கிறது.மேட்டூர் அணையில் தற் போதைய நீர் இருப்பு 36 டி. எம். சியாக உள்ளது. தினசரி 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் பட்சத்தில் இருப்பு நீர் குறைந்தபட்சம் 20 நாள்கள் வரையே தாக்குப்பிடிக்கும். நீர் குறைந்து விட்டால் விவசாயத்திற்கு வழங்கப்படும் நீரை நிறுத்திவிட்டு குடிநீர் தேவைக்கு மட்டுமே அணையில் இருந்து வெளியேற்றுவர்.
விவசாயிகளை பாதுகாக்க வேண்டியும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முதல்வர் பெற்று தரக்கோரியும் தமிழகம் முழுவதும் வரும் 23ஆம் திகதி அனைத்து ஊராட் சிகளிலும், மாநகராட்சி, நகராட்சியின் அனைத்து தொகுதிகளிலும் பா. ஜ. க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள் ளது – என்றார்.