இலங்கையில் கண்ணுக்கு தெரியாத காற்று வளம் மூலம் ஏறத்தாழ 40 GW மின்வலுவை வட/மேற்கு இலங்கையில் மாத்திரம் அதிக சிரமமின்றி On/Offshore Wind Power Generation மூலம் பெறலாம் என்று 2012 களில் கணித்து இருந்தாலும் அதற்கான துணிவான எந்த நடவடிக்கையும் இலங்கை எடுக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தி விடயத்தில் மிகவும் துணிவான முறையில் Daredevil வகை தீர்மானங்கள் எடுத்த நாடுகள் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளன.
ஜப்பான்,தாய்வான்,தென் கொரியா, சிங்கப்பூர், மலேஷியா,UAE , ருவாண்டா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஐரோப்பா கூட இந்தியாவை தேடி புறப்பட்ட அந்த Daredevil தீர்மானம் காரணமாகவே இன்றைய Global Position தக்க வைத்து இருக்கிறார்கள். Deng Xiaoping எடுத்த Daredevil தீர்மானம் காரணமாகவே சீனாவின் இன்றைய கற்பனைக்கு எட்டாத அசுர வளர்ச்சி சாத்தியம் ஆகியது.
இலங்கையின் தற்போதைய உச்ச பட்ச ஆண்டு தேவை 4.2 GW இதனைவிட ஏறத்தாழ 10 மடங்கு மின்வலுவை வட/ மேற்கு இலங்கையில் உற்பத்தி செய்யும் வளம் இருக்கும் போது அதன் 0.0025 சதவீதத்தை கூட நாம் இன்னும் பெறவில்லை.
இந்த இடத்தில் தான் ஆசிய கண்டத்தின் பிராதான Electric Power Grid உடன் Standalone ஆக இருக்கும் இலங்கை தீவின் மின்சார வலு கட்டமைப்பு undersea cable மூலம் இணைக்கப்பட வேண்டிய முக்கிய தேவை உள்ளது. இது Global Energy Sustainability வரைபடத்தில் தெளிவாக அடையாளம் காணப்பட்ட திட்டம்.
இலங்கை-இந்நியா பாக்கு நீரிணைக்கு குறுக்காக ஆகக் குறைந்தது இரண்டு 500 MW Subsea Power Transmission Line மிக விரைவாக உருவாக்கி அதன் மூலம் இலங்கையின் மேலதிகமாக உற்பத்தி ஆகும் Offshore காற்றுவலு மின்சாரம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியா ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியை ஒரு கௌரவமான நிலைக்கு கொண்டு வர முடியும். அத்துடன் அதற்கு மேலதிகமாக மிகை மின் உற்பத்தி பசுமை ஐதரசனாக (Green Hydrogen) உப்பு உற்பத்தி மையங்களை அண்மித்து பரந்தனில் அல்லது புத்தளம் எலுவன்குளம் அல்லது மன்னார் பெருநிலப்பரப்பில் புதிதாக Green Heavy Industrial Zone ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பசுமை ஐதரசன் ஏற்றுமதி Super Power ஆக இலங்கை உருவாகும்.
மேலும் இந்த Offshore Wind Power Generation Turbine இன்று உலகில் இருக்கும் மிகப் பெரிய 18 MW Haliade-X அல்லது Vesta நிறுவனத்தின் V80 and V90 series அல்லது இதற்கு இணையானதாக இருந்தால் மிக விரைவான ROI பெறமுடியும். பெரும் கடற்பரப்பில் ஏறத்தாழ ஆயிரம் Wind Tower களின் அடிப்பகுதி இயற்கை சூழலுடன் இணைந்த செயற்கை முருகைக் கல் சூழல்தொகுதிகளை உருவாக்கி பாக்கு நீரிணை பகுதியை கடல் உணவு உற்பத்தி மற்றும் கடற் சூழல் பாதுகாப்பு உச்ச நிலையை எட்ட முடியும்.
இதன் மூலம் இலங்கை மற்றும் இந்திய மின் மற்றும் மீன் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காணமுடியும். Indo-Lanka Joint Fishing நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதை இலங்கையில் உள்ள துறைமுகங்களில் முதலிட வைத்து அதன் மூலம் இலங்கையில் பிடிக்கப்படும் கடல் உணவு இலங்கை தேவைக்கு போக மேலதிகமான மீன் கச்சைதீவு இணைந்த மீன் சந்தை உலகின் மிகப்பெரிய மீன் சந்தையான டோக்கியோ Tsukiiji மீன் சந்தையை அடிப்படையாக கொண்டு அதைவிட பிரமாண்டமாக உருவாக்கலாம்.
இலங்கை இந்திய மீனவர்கள் மத்தியில் இருக்கும் தீராத பிரச்சனைகளை தீர்க்கும் மிகவும் சிறந்த வழிமுறை இதுதான். இந்த நிலையில் தான் இந்தியாவின் அதானி நிறுவனம் இந்த பாரிய Potential ஐ அடையாளம் கண்டு இலங்கையின் சக்திவல Landscape இல் ஒரு Player ஆகும் கனவில் நுழைந்தது. ஆனால் இலங்கையின் ஊழல் மிகுந்த அரசியல் கலாச்சாரம் காரணமாக Unsolicited வழி மூலம் பல விடயங்களை சாதிக்க முடியும் என்று நிலை இருந்து வந்தால் கிட்டத்தட்ட Energy Monopoly நோக்கியா கனவாக அதானி நிறுவனம் நீண்ட கால திட்டம் தீட்டியது.
இது கடன் சிக்கலில் தவிக்கும் இலங்கைக்கு குறுகிய கால நலன்களை தந்த போதும் நீண்ட கால அடிப்படையில் இலங்கையின் நலன் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும். இந்த திட்டத்தில் இந்திய இலங்கை ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் இது ஒரு நிறுவனம் சார்ந்த திட்டமாக இருக்காமல் இந்திய அரசு மின்வலு முகவர் நிலையம் Power Grid Corporation of India , இலங்கை மின்சார சபை மற்றும் தனியுரிமை நிறுவனங்கள் சார்ந்த Consortium மூலம் செயற்படுத்த பட வேண்டும்.
இதை இங்கு கூறுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் அதானி நிறுவனத்தின் மேல் US attorney’s office நேற்று முன்தினம் (21) தாக்கல் செய்த 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்ச குற்றச்சாட்டு பாரிய சர்வதேச அதிர்வலைகள் எழுப்பியுள்ளமை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு அதானி அனுப்பிய வாழ்த்து செய்தியில் அமெரிக்காவில் அதானி நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதாக இடம்பெற்றிருந்து. எனினும் அந்த செய்தி காய்வதற்குள் நியூயார்க் புரூக்லின் நீதிமன்றத்தில் அமெரிக்கா சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்துள்ளமை கவனிக்கத்தக்கது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் அதானி நிறுவனம் 34 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளது. அதானி நிறுவனம் ஒரு நாளில் நஷ்டமடைந்த இந்த பணம் மட்டுமே போதும் இலங்கை அரசு தனது கடனில் 2/3 பங்கை அடைத்து விட்டு சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு என்று பாடிக்கொண்டே ஏறியிருக்க முடியும்.
அத்துடன் 2021 இல் கணிக்கப்பட்ட போது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 260 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இலங்கையில் மொத்த பெற்றோலிய வளம் (கடனே 54 பில்லியன் அமெரிக்க டொலர்கள்),இலங்கை வடமேற்கு கடற்கரையில் காணப்படும் LNG/ மசகு எண்ணெய் அகழ்ந்து எடுக்கப்பட விரைந்து செயற்படவேண்டும்.
அத்துடன் இலங்கைக்கு மிக மிக அத்தியாவசியமாக புதிய ஒரு Petroleum Refinery இரண்டாவது தேவைப்படுகிறது இது திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டையில் விரைவாக அமைக்கப்பட வேண்டும்.இதற்காக உண்மையில் சிங்கப்பூர் TEMASEK அல்லது GIC போன்ற அரசுக்கு சொந்தமான Global Investment Vehicle ஒன்றை அமைக்க வேண்டும்.
புதிய அரசாங்கம் மின் வலு எரிவலு சார்ந்த இலங்கையின் வாய்ப்புகளை பயன்படுத்தி இலங்கையை முன்னேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே புதிய மக்கள் ஆணை!