கடந்த பாராளுமன்ற பொது தேர்தலில் வடகிழக்கில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தமிழரசு மற்றும் ஏனைய கட்சிகள் தங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையின்மை காரணமாக தனித்தனியா போட்டியிட்டு தங்களுடைய பிரதிநிதிதுவத்தை இழந்த நிலையில், திருகோணமலை மாவட்டம் மட்டும் ஒரு வித்தியாமான முன் உதாரணத்தை காட்டியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர அனைத்து தமிழ் கட்சிகளும் திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவதை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒன்றிணைத்து ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிட்டு அதை வென்று இருக்கின்றார்கள்.
இது தமிழ் அரசியலில் முன் உதாரணமான பார்க்க பட வேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது. இவ்வாறு இவர்கள் போட்டியிடாமல் இருந்திருந்தால் திருகோணமலையின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த கூட்டு தொடருமா என்ற கேள்வி ஒன்று தற்போது எழுந்து நிற்கிறது . ஏனெனில் இந்த கூட்டின் போது போட்டியிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களிடையே ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளார்கள்.
அந்த ஒப்பந்தத்தின் படி இந்த தேர்தலில் யார் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அதற்கு பிறகு மாவட்டத்திற்கு வரும் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் அனைத்தும் அல்லது நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விடயங்கள் அனைத்தும் ஒன்றாக போட்டியிட்ட வேட்டபாளர்களுடனும் கலந்துரையாடி, அவர்களுடைய ஒப்புதலுடன் தான் செய்யப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கின்றது.
இந்த ஒப்பந்தத்தை புளொட் சார்பிலே போட்டியிட்ட ஜதீந்திரா என்ற வேட்பாளர் தான் கையொப்பம் இட்ட ஒப்பந்தத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தில் மேற்கூறப்பட்ட விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
இப்போது இருக்கின்ற சவால் என்னவெனில் அந்த ஒப்பந்தத்தை தமிழரசு கட்சியும், தமிழரசு கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற குகதாசன் பின்பற்றுவாரா? என்பதும் அவ்வாறு பின்பற்றாத பட்சத்தில் அதன் பின்விளைவாக ஏற்படும் விடையங்கள் அனைத்திற்கும் தமிழரசு கட்சியே பொறுப்பெடுக்க வேண்டும் என்பதும், அது திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தையும், தமிழ் தேசியத்தையும் ஆபத்திற்குள்ளாக்கும் என்பதும் தமிழரசு கட்சியும், ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
எனவே திருகோணமலையை சரியான முறையில் தக்கவைப்பதற்கும், தொடர்ச்சியான தமிழ் தேசியத்தின் தலைமையாக அது செயற்படுவதற்கும் சரியான முறையிலே அனைவரும் சிந்தித்து செயற்படவேண்டும். இல்லையேல் மீண்டும் ஏனைய மாவட்டங்களில் நடந்தது போல திருகோணமலையும் பாரிய தோல்வியை சந்திக்கும் என்பது சந்தேகமில்லை.