சீரற்ற வானிலை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், புத்தளம் முதல் மன்னார் வரையிலும், காங்கேசன்துறை ஊடாக திருக்கோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் மணித்தியாலயத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மன்னார் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளிலும் கடலலை மேல் எழக்கூடும் எனவும் குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.