இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் மொத்தம் 957 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி 1 முதல் மே 13 வரை நாடு முழுவதும் மொத்தம் 895 பாரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்தக் காலகட்டத்தில், 965 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பொலிஸாரின் கூற்றுப்படி, அலட்சியம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
போக்குவரத்து விபத்துகளைக் குறைக்க நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதோடு மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் சாரதிகளுக்கான விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.