அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மதுரசா ஒன்றில் இருந்து 11 மாணவர்கள் சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் வெள்ளநீரில் சிக்கி தடம்பிரண்டதில் 5 மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இதுபற்றி தெரியவருவதாவது,
நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கிவரும் மதுரா ஒன்றில் தங்கியிருந்து கற்றுவரும் மாணவர்களை நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை விடுவித்ததையடுத்து சம்மாந்துறையைச் சேர்ந்த 11 மாணவர்களை உழவு இயந்திரம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் ஏற்றி அவர்களை அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து சம்மாந்துறையை நோக்கி பிரயாணித்த உழவு இயந்திரம் காரைதீவு சம்மாந்துறை வீதியிலுள்ள மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் வெள்ள நீர் வீதிக்கு மேலால் செல்லும் நிலையில் உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி வெள்ளத்தில் தடம்புரண்டு மூழ்கியதையடுத்து அங்கிருந்த பொதுமக்களால் 5 மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 6 மாணவர்கள் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இதில் 12 தொடக்கம் 16 வயதுடைய மாணவர்கள் பிரயாணித்துள்ளதுடன், உழவு இயற்திர சாரதி மற்றும் உதவியாளர் உட்கட 8 பேர் காணாமல் போயுள்ளனர் இவர்களை கடற்படையினரின் உதவியுடன் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக சம்மாந்துறை மற்றும் காரைதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை காரைதீவுக்கும் சம்மாந்iறைக்கும் இடையிலான போக்குவருத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வீதிக்கு மேலால் 4 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து செல்லுகின்றதுடன் இந்த பகுதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.