அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச மாணவர் விசாக்களுக்கான கட்டணத்தை 710 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 1,600 டொலர்களாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இரட்டிப்பாக்கியது.
தற்போது இதனை மீண்டும் அதிகரிப்பதாக ஆளும் தொழிலாளர் கட்சியும் பிரதான எதிர்கட்சியும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

முன்னதாகவே, அவுஸ்திரேலியாவின் பழமைவாத எதிர்ப்பு கட்சி, விசா கட்டணத்தை குறைந்தபட்சம் 2,500 முதல் 5,000 அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தது.
சர்வதேச மாணவர்கள், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளனர்.
ஆனால், அதிகளவான சர்வதேச மாணவர்களின் வருகை, அவுஸ்திரேலியாவில் சுகாதார மற்றும் ஏனைய பொதுச் சேவைகளின் செலவுகளையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.