Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் புதன்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டு, மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்தார்.

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் நிகழ்நிலை மூலம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பிரதான வீதிகளில் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமைக்கு வருவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியதுடன் பலர் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.

இதனைக் கருத்திற்கொண்டு மாணவர்களை வீட்டுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், நிகழ்நிலை மூலம் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் மற்றும் உன்னிச்சைக் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதில் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட்டுவருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
வயலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்குண்ட மட்டு விவசாயி ஒருவர் விமானப்படையினரின் கெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டார்

வயலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்குண்ட மட்டு விவசாயி ஒருவர் விமானப்படையினரின் கெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு