கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலைமையினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் எனவும் அவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன தரவுகளின் அடிப்படையில் இன்றைய (30) காற்றின் தரம் கீழே தரப்படவுள்ளது.