மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் இ.முரளீஸ்வரன், பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராக பதவியேற்றிருந்த நிலையில் மேலதிகமாக கடந்த 11.04.2024 அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்காலிக நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இந்தநிலையில் எதிர்வரும் 2.11 ஆம் திகதிக்கு பின்னர் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இராசரெத்தினம் முரளீஸ்வரன் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.