காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, புதிய காவல்துறை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளராக கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மனதுங்க இதற்கு முன்னர் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றியிருந்தார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காலத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தனக்குத் தெரியாது என பதிலளித்த பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கடுமையாக விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்கள் உட்பட பல மூத்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி பணிப்பாளராக முத்துமால நியமிக்கப்பட்டுள்ளார்.