91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி இலங்கையையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
சன்சுல் செஹன்ஷ லக்மால் என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்தவராவார். 1,200 ரூபிக்ஸ் கியூப்களைப் பயன்படுத்தி இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் இடம்பிடித்துள்ளார்.

சோழன் புக் ஒஃப் வேள்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நேற்று முன்தினம் (03) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில் முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
சன்சுலின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், அமைப்பாளர்கள், ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து, அவருக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவற்றுடன் அவரது பெரும் சாதனையை கௌரவிக்கும் வகையில் கிண்ணமும் வழங்கப்பட்டது.