தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 நாட்களில் 233 சந்தர்ப்பங்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
மேலும், சிறைக்காவலர்களின் 234 நாட்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது, சிறைச்சாலை தலைமையகத்தின் 09 இருப்பு வாகனங்கள் 62 தடவைகளில் 372 கிலோமீற்றர் தூரம் சென்று கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகளின் வீடுகளுக்குள் அழைத்துச் சென்றுள்ளதாக கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையில் மேலதிக நேரச் செலவுகளை கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்த போதிலும், 2023ஆம் ஆண்டில் மேலதிக நேர மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளாக 982 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.