Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் – அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்விலிருந்து நேற்றுடன் (07) 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக்கூடுகளும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட வைத்திய அதிகாரி குறித்த எலும்புக்கூடுகளை நீதிமன்றின் பாதுகாப்பில் வைப்பிலிடுவார் என்றும் சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்தார்.

யாழ்- அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி பரீட்சாத்த அகழ்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரீட்சாத்த அகழ்வுப் பணியானது நேற்றுடன் தற்காலிகமாக நிறைவுறுத்தப்படப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியானது மேலும் 45 நாட்களுக்கு நீடித்து நீதவான் ஆ.ஆனந்தராஜா நேற்று முன்தினம் அனுமதி அளித்திருந்தார்.

45 நாட்களுக்கான அகழ்வுப்பணிக்கான பாதீடு நேற்று சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ் நீதவான் நீதிமன்ற நீதபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதற்கமைய அடுத்த மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிக்காக உத்தேச திகதியாக ஜூன் 26ம் திகதி நீதவான் அனுமதித்துள்ளார்.

குறித்த உத்தேச திகதிக்குள்ளாக சமர்பிக்கப்பட்ட பாதீட்டின் நிதி கிடைக்கப்பெற்றால் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி உத்தேச திகதியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!
செய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

July 30, 2026
முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!
செய்திகள்

முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!

July 30, 2026
பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!
செய்திகள்

பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!

July 30, 2026
விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!
செய்திகள்

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!

July 30, 2026
மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்
காணொளிகள்

மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்

July 30, 2026
காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!
செய்திகள்

காட்டன் – தலவாக்கலை வீதியில் இரு அரச பேருந்துகள் மோதி விபத்து!

July 30, 2026
Next Post
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு