மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகிறதா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், அவர் சபாநாயகரை நோக்கி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களமா அல்லது காவல்துறையா மேற்கொள்கிறது எனவும் கேள்வியெழுப்பினார்.
இந்த அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுமா என நீங்கள் கூறவேண்டும்.
5000 பேருக்கு ஒரு மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இதை நிறுத்துவீர்களா? இது பற்றி நீங்கள் விளக்கமளிக்கவேண்டும்.
நேற்றைய தினம் இந்த விடயத்தைப்பற்றி கேட்குமாறு மக்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆகவே இது இது பற்றி விளக்கமளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.