கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் காத்தான்குடி வீதியால் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் நேற்று (07) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியில் பயணித்த யாருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.
பிரதேசவாசிகளின் துரித முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.