இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் இருவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டவீரர் ட்ரெவிஸ் ஹெட் ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இருவரும் நடந்து கொண்ட விதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொஹமட் சிராஜிற்கு போட்டிக் கட்டணத்தில் 20 வீதம் அபராதமாக செலுத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடுகளத்தில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ட்ரெவிஸ் ஹெட் ஆட்டமிழந்து சென்ற போது சிராஜ் நடந்து கொண்ட விதம் குறித்து சர்ச்சை எழுந்திருந்தது.
இருவரும் போட்டி ஒழுக்க விதிகளை மீறியதாகக் குறி அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு தடைப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல இந்த நடவடிக்கை குறித்து அறிவித்துள்ளார்.