நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கடையில் மறைத்து வைத்திருந்த 4 கிலோ 200 கிராம் மாவா போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் அவரை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுத்தபட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
மேலும், சட்ட விரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் இதன் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்கது .