கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் வேர்கின்டன் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தியமை மற்றும் சட்டவிரோதமாக சிறையில் வைத்தமை தொடர்பான சம்பவமொன்று தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் கள படைத் தலைமையகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.