சமூகத்துக்கும் ரணில், மஹிந்த போன்றோருக்கும் துரோகம் செய்து பழக்கப்பட்ட ரவூப் ஹக்கீம் .
இப்போது சஜித் கட்சியின் தேசிய பட்டியல் இழுபறியில் ஆப்பு இழுத்த குரங்கு நிலையில் உள்ளார் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக இன்று (12) காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,
ஹக்கீம் ஒரு முட்டாள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு வெல்ல முடியாது என தெரிந்த ஹக்கீம் சஜித் கட்சியில் மறைந்து கொண்டு கண்டியில் போட்டியிட்டார்.
தான் கண்டியில் கேட்டு வெல்ல வேண்டும் என்பதற்காக கட்சியை சஜித்திடம் அடகு வைத்துவிட்டு இப்போது தேசிய பட்டியலுக்காக ஒப்பந்தம் முறிந்து விட்டதாம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
இத்தனைக்கும் ஹக்கீம் பெற்ற முப்பதினாயிரம் வாக்குகளுக்காக சஜித் தரப்பிடம் தேசிய பட்டியல் கேட்பது நியாயம் அல்ல.
கடந்த 2020 தேர்தலிலும் சஜித் தேசிய பட்டியல் கொடுக்கவில்லை. விழுந்த குழியில் தொடர்ந்தும் தெரிந்து கொண்டே விழுவதும் ஏமாறுவதும் ரவூப் ஹக்கீமின் தொடர் முட்டாள்தனம்.
நாங்கள் தியாகம் செய்து வளர்த்த கட்சியை நாசமாக்கியவர் இந்த ஹக்கீமும் அவரோடிருந்த, இருக்கும் கொள்ளைக்கூட்டம்.
அது மட்டுமின்றி சஜித் பிரேமதாசவுக்கும் அரசியல் அறிவு போதாது என்பதையும் இது காட்டுகிறது.
தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக சஜித் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் அப்போதுதான் தேசிய பட்டியல் தருவேன், இல்லாவிட்டால் தனித்தே போட்டியிட்டு வாருங்கள் என சஜித்தும் ஹக்கீமிடமும் ரிசாதிடமும் சொல்லியிருக்க வேண்டும்.
அவரும் சிறு பிள்ளை போன்று நடந்து கொண்டார்.
முஸ்லிம் என்பதை தன் பெயரில் கொண்ட முஸ்லிம் காங்கிரசினதும் ஹக்கீமினதும் தொடர்ச்சியான தவறுகளால் முஸ்லிம் சமூகம் அவமானப்பட்டு நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமற்ற உறுப்பினர்களுக்குள் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஷாம் காரியப்பர் இணைக்கப்பட்டுள்ளார்.