தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இருப்பினும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புலமைப்பரிசில்களைப் பெற்ற இலங்கையின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட மாட்டாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி அதிகாரி ஜேம்ஸ் மெக்லியோட் மற்றும் ஆசிய ஒலிம்பிக் கமிட்டியின் பணிப்பாளர் ஜெனரல் ஹுசைன் அல் முஸல்லம் ஆகியோரின் கையொப்பத்துடன் நேற்று (13) வெளியிடப்பட்ட கடிதத்தில் இந்த அறிவிக்கப்பட்டுள்ளது.