Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் வருடாந்தம் 12,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதாக தகவல்

இலங்கையில் வருடாந்தம் 12,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதாக தகவல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்துகளுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையில் 10,000 முதல் 12,000 பேர் வரை வருடாந்தம் விபத்துகளால் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாப் பரவலுக்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் விபத்துகள் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனாக உள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய போக்கின்படி, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் குறித்த எண்ணிக்கை 2 அல்லது 3 இலட்சத்தால் அதிகரிக்கலாம்.

இதனை மாற்றியமைப்பதற்கு ஒருங்கிணைந்த திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்

இந்நிலையில் பதுளை – பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

பண்டாரவளை நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

பண்டாரவளையைச் சேர்ந்த 36 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
Next Post
2028ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு