வாகரை பொலிஸ் விசேட அதிரடி படைக்கு கிடைத்த தகவலுக்கமைய வாகரை அம்மந்தனவெளி பகுதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த பகுதியில் நடத்திய சோதனையில் குறித்த துப்பாக்கியுடன் 26 வயதுடைய ராசவடிவேல் சிவகாந்தன் என்னும் நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதேசமயம் மேலதிக விசாரணை வாகரை பொலிஸாரால் மேற்கொண்டு வருகின்றனர்.