திருகோணமலை கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (18) கமநல சேவை நிலையத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/12/image-434-1024x512.png)
முன்னுரிமை அடிப்படையில் கிண்ணியா பிரதேச கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட 2613 விவசாயிகள் இவ் இலவச மானிய பசளையை பெற தகுதி பெற்றுள்ளனர்.
இதற்காக கிண்ணியா கமல சேவை நிலையத்துக்கு 50 கிலோ நிறையுடைய 2339 பொதிகளுடைய பசளைகள் வழங்கப்பட்டுள்ளன.