அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி கவிந்திரன் கோடீஸ்வரன் நாடாளுமன்றதில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
நேற்றையதினம்( 18) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை நாடாளுமன்றில் பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நியமிக்காமை தொடர்பாகவும் மற்றும் கல்முனை மக்களின் உரிமை தொடர்பாகவும் குரலெழுப்பியுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு அம்பாறை மாவட்டத்தில் கணிசமான தமிழ் மக்கள் ஆதரவளித்துள்ள நிலையில் தற்போது அந்த மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.