இலங்கை பொலிஸாருக்கான வாகன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
இந்த உதவித்தொகையை பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு பொலிஸ் நிலையங்களின் கடமை தேவைகளுக்காக கெப் வண்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.