ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல் முறையாக தமக்கு இளம் வயதில் இரு ஆண் மகன்கள் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் முன்னெடுக்கும் வருடாந்திர நேரலை நிகழ்ச்சி ஒன்றிலேயே, தமது இளம் வயது இரு மகன்கள் தொடர்பில் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இருவருடன் திரைப்படங்களைப் பார்த்து மகிழ்வதுண்டு என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். தமது காதலி ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா என்பவரின் மகன்களையே புடின் குறிப்பிட்டுள்ளார்.
விளாடிமிர் புடின் தமது குடும்பம் மற்றும் பிள்ளைகள் தொடர்பில் இதுவரை குறிப்பிட்டதே இல்லை என்ற நிலையில், முதல் முறையாக தமது காதலியின் இரு மகன்களை வெளிப்படையாக தமது பிள்ளைகள் என குறிப்பிட்டுள்ளார்.
விளாடிமிர் புடினுக்கு அலினா கபேவாவுடன் இரு பிள்ளைகள் இருப்பதாக இதுவரை தகவல் கசிந்து வந்த நிலையில், முதல் முறையாக புடினே அதை ஒப்புக்கொண்டுள்ளது ரஷ்ய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கபேவாவின் மூத்த மகன் இவானுக்கு 9 வயதும் இளைய மகன் விளாடிமிருக்கு 5 வயதும் என்றே கூறப்படுகிறது. ஆனால், உத்தியோகப்பூர்வ ஆவணங்களில் தமக்கு இரு மகள்கள் மட்டுமே இருப்பதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 21 வயதில் இன்னொரு இரகசிய மகளும் புடினுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் பிரதமராக இருக்கும் போதும் தற்போது ஜனாதிபதியாக நீடித்து வரும் போதும், தமது குடும்பம், பிள்ளைகள், குடியிருப்பு என தனிப்பட்டத் தகவல்கள் எதையும் அவர் ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதில்லை.
ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் முதல் முறையாக தமக்கு இளம் வயதில் இரு மகன்கள் இருப்பதாக புடின் ஒப்புக்கொண்டுள்ளார்.