கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகிய இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.