வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (20) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குலசிங்கம் திலீபனின் பிரத்தியேக செயலாளரும், நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டோபர் டினேஸ் என்பவர் நேற்றிரவு (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி ஒன்றினை குத்தகை அடிப்படையில் பெற்றுத்தருவதாக கூறி 20 லட்சம் ரூபா காசோலை மோசடி தொடர்பிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.